ஜே.என்.யூ. மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலையில் கடிதம் எதுவும் சிக்கவில்லை : போலீஸ்

images (3)

புதுடெல்லி: ஜே.என்.யூ. மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக கடிதம் எதுவும் சிக்கவில்லை என்று டெல்லி காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்ததை மணிப்பூர் மாணவர் முதலில் பார்த்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் முத்துகிருஷ்ணனின் செல்போன், மற்றும் உடைமைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருதாக தெரிவித்தார். ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் ஆய்வு படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த தலித் மாணவர் டெல்லியில் மர்மமான முறையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சேலம் சாமிநாதபுரத்தை சேர்ந்த ஜீவானந்தத்தின் மகன் முத்து கிருஷ்ணன் ஆவார். 30 வயதான இவர் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலை கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்தார். ஹோலி கொண்டாட்டத்திற்காக டெல்லி முனிர்கா என்ற இடத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். இந்த தற்கொலை குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகநூல் பதிவு கொண்டு விசாரணை

முத்துகிருஷ்ணன் முகநூல் பதிவை கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். முத்துகிருஷ்ணன் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>