ஜெருசலேம் பிரச்சனை குறித்து உடனடியாக ஐ.நா.வில் விவாதம் நடத்த வேண்டும்- உலக நாடுகள் கோரிக்கை

2017-07-12-07-56-56

ஜெருசலேம் பிரச்சனை குறித்து உடனடியாக ஐ.நா.வில் விவாதம் நடத்த வேண்டுமென பிரான்ஸ், இத்தாலி, பிரட்டன் உள்ளிட்ட எட்டு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நியூயார்க்:

கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வந்தன. சீனாவும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் ஜெருசலேம் நகரை தலைநகராக அறிவிப்பது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஐ.நா. சபை அறிவுரை கூறியிருந்தது.

இதற்கிடையே, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை மாற்றுவதற்கு அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் டெல்அவிவ்-ல் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த முடிவுக்கு கத்தார், ஜெர்மனி, ஈரான், பிரட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. சபை மற்றும் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெருசலேம் பிரச்சனை குறித்து ஐ.நா.சபையில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என பொலிவியா, எகிப்து, பிரான்ஸ், இத்தாலி, செனகல், ஸ்வீடன், பிரிட்டன், உருகுவே ஆகிய எட்டு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>