ஜெருசலத்தில் கலவரம்: மூன்று பாலஸ்தீனர்கள் பலி :மு.திலிப்

TOPSHOTS-PALESTINIAN-ISRAEL-CONFLICT-FUNERAL-SINOKROT

இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையே ஜெருசலத்தில் கலவரம் வெடித்துள்ளது. இதனால், இரு நாட்டிலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஜெருசலத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில் பாதுகாப்புக் காரணங்களுக்கு என்று கூறி இஸ்ரேல் அரசு, மெட்டல் டிடெக்டர்களை சில தினங்களுக்கு முன்னர் பொருத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள், இஸ்ரேலின் செயலை கண்டித்து ஜெருசலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம் சீக்கிரமே கலவரமாக மாறியுள்ளது. இதையொட்டி, மூன்று பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால், கலவரத்தின் வீரியம் அதிகரித்து தற்போது ஜெருசலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இஸ்ரேல் தரப்பில் இருந்து இரண்டு போலீஸார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே மசூதிக்கு பாதுகாப்பை காரணம்காட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இஸ்ரேல், 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அல்-அக்ஸா மசூதிக்குள் நுழையக் கூடாது என்று புதிய கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. இந்த அறிவிப்பு பாலஸ்தீனர்கள் மத்தியில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>