ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள்: சென்னையில் அமைதி ஊர்வலம்

jayalalitha-memorial_2017_12_4

சென்னை : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி இன்று சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ. தி.மு.க. சார்பில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிவிப்பிற்கிணங்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமைதி ஊர்வலம், நினைவு அஞ்சலி, உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அமைதி ஊர்வலம்

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலை அருகே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு செல்கிறார்கள். இன்று காலை 9.30 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி அவரது அரசியல் பயணம் தொடர்ந்திட அ.தி.மு.க. வினர் உறுதிமொழி ஏற்பர்.

இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் எம்.பிக்கள் எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கு பெறுவார்கள். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அ. தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களில்…

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதே போல் முக்கிய நகரங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் நடக்கவுள்ளது.

மரணத்தில் சந்தேகம்

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரத்தில் வழக்கறிஞர் குமாரவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். அதில் டிசம்பர் 5-ல் தான் ஜெயலலிதா மரணமடைந்தாரா என்பதில் சந்தேகம் இருக்கிறது. எனவே அவரது நினைவு தினத்தை டிசம்பர் 5-ல் அரசு சார்பில் அனுசரிக்கக் கூடாது என்று வழக்கறிஞர் குமாரவேலு தடை கேட்டிருந்தார். அ.தி.மு.க.வினர் வேண்டுமானால் ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்துக் கொள்ளலாம் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தடைவிதிக்க மறுப்பு

இந்த மனு நேற்று ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மரண தேதியை பிரபல மருத்துவமனையே இறப்பு சான்றிதழாக அளித்துள்ளது. மேலும் விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து எந்த சந்தேகத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே இத்தகைய சூழலில் ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு அனுசரிக்கத் தடைவிதிக்க முடியாது என்று கூறி வழக்கறிஞரிரன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதனால் இன்று அரசு சார்பில் நினைவு தினம் கொண்டாட இருந்த தடை நீங்கியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>