ஜெயங்கொண்டம் அருகே ஓ.என்.ஜி.சி.யின் கிணற்றில் எண்ணெய் கசிவு

jakkamma news

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தென்வீக்கம் சோழன்குறிச்சி உள்பட 6 இடங்களில் தனிநபர்களிடம் இருந்து விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து ஓ.என்.சி.ஜி. நிறுவனம் மீத்தேன் எடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த குருவாலப்பர் கோயில் அருகேயும், ஆழ்துளை கிணற்றை போட்டுள்ளது.

அதில் இருந்து எண்ணெய் கசிவு மற்றும், பெட்ரோல், டீசல் போன்ற துர்நாற்றத்துடன் வாயுக்கசிவு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனிடையே மன்னார்குடியில் நடந்த நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை மத்திய அரசு சுரண்ட நினைப்பது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தவறு என்றனர்.

மீத்தேன், ஷேல் வாயு, ஹைட்ரோ கார்பன் என அடுத்தடுத்த மத்திய அரசின் கனிமவள ஆய்வுகளால் அச்சமடைந்துள்ள தமிழக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனினும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அதை கண்டு கொள்ளாமல் தனது ஆய்வை சத்தமே இல்லாமல் மேற்கொண்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>