ஜி.எஸ்.டி மற்றும் நகராட்சி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் தியேட்டர்கள் மூடப்படும்;அபிராமி ராமநாதன்

800x480_40d23bded497df0f9763eb275aa65f7c

ஜி.எஸ்.டி மற்றும் நகராட்சி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

‘ஜி.எஸ்.டி மற்றும் நகராட்சி வரி விதிப்பால் திரைப்படங்களுக்கான டிக்கெட்களின் விலையும் உயரும் என்பதால், இந்த வரி ஏற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் திங்கள் முதல் திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் நிறுத்தப்படும்’ எனத் தமிழ் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதுபற்றி அபிராமி ராமநாதனைத் தொடர்பு கொண்டு பேசிய போது ‘நாங்கள் முதல்வரைச் சந்தித்து இதுதொடர்பாகப் பேசினோம். முதல்வர் அனைத்து அமைச்சர்களுடனும் பேசிவிட்டு ஜி.எஸ்.டி வரி மற்றும் நகராட்சி வரிகள் பற்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார். நாங்களும் வணிகத் துறை மற்றும் நகராட்சித் துறை என அனைத்து தரப்பட்ட அமைச்சர்களையும் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வைத்தோம். சில திரைப்பட வர்த்தக சபையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நிறைவுபெற்றது. கூட்டத்தின் முடிவில், இன்று முதல் தியேட்டர்களை மூட முடிவெடுத்துள்ளனர். நாளை முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>