ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைத்தார் பிரணாப் முகர்ஜி : தலைவராக நிதியமைச்சர் அருண்ஜேட்லி செயல்படுவார்

gst-india

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் விதிக்கப்பட வேண்டிய வரி விகிதங்களை தீர்மானிப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 279 A பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின் படி குடியரசு தலைவர் இந்த கவுன்சிலை அமைத்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கவுன்சில் வரி விதிப்பு குறித்து முடிவு செய்யும்.

மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் அல்லது அரசுகள் நியமிக்கும் ஒரு அமைச்சர் இந்த குழுவில் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். அத்துடன் நிதியமைச்சகத்தின் வருவாய் அல்லது நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் இணையமைச்சர் ஒருவரும் உறுப்பினராக சேர்க்கப்படுவார்.

ஜி.எஸ்.டி.யின் கீழ் வரி விதிக்கப்பட வேண்டிய பொருட்கள், வரி விதிப்பின் அளவு, வரி விலக்கு அளிக்க வேண்டிய பொருட்கள் உள்ளிட்டவை குறித்து இந்த கவுன்சில் தீர்மானிக்கும். ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கினைந்த ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கான சட்டங்கள் வரையறுக்கப்படும்.

நாடு முழுவதும் தற்போதுள்ள பல வகையான வரிகளை அகற்றி ஒரே மாதிரியான சீரான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜி.எஸ்.டி. சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. 19 மாநிலங்களின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>