ஜி.எஸ்.ஜா குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது… தமிழக அரசு

2016-25-10-14-50-42%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d

காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேப மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்ச‌ீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய நீர் வளத்துறை ஆணையர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான காவிரி தொழில்நுட்ப குழு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள அணைகள், நீர் நிலைகள், நிலப்பரப்புகளை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

ஜி.எஸ்.ஜா தலைமையிலான குழுவின் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்சேப மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கர்நாடகாவில் உள்ள, 42 தாலுகாக்கள் வறட்சி பாதிக்கப்பட்டவையாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை தமிழக அரசு மறுத்துள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை பின்பற்றாமல், கர்நாடகா அதிகளவிலான நீரை எடுத்து கொண்டு விவசாய நில பரப்பை அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காமல் இருட்டடிப்பு செய்வதாக தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீர் இல்லாமல் தமிழகத்தில் குறுவை முற்றிலுமாக பயிரிடப்பட வில்லை என தெரிவித்துள்ள தமிழக அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>