ஜாக்கி சானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது

_academys_2016_governors_awards

பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது.

புகழ் பெற்ற ஆஸ்கர் விருதுகளை அமெரிக்க திரைப்படத் துறை அகாடமி வழங்கி வருகிறது. சிறந்த திரைப்படம், திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான விருதுகளை மட்டுமன்றி, ஆண்டுதோறும் திரைப்படத் துறைக்கு முக்கியப் பங்காற்றியவர்களை கெளரவிக்கும் விதமாக சிறப்பு விருதுகளையும் அந்த அகாடமி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான கெளரவ விருதுகளை அந்த அகாடமி அறிவித்துள்ளது. இவ்வாண்டு கெளரவ விருது பெறுவோர் பட்டியலில் பிரபல ஆக்ஷன் நடிகர் ஜாக்கி சான் (62) இடம்பெற்றுள்ளார். ஹாங்காங்கில் பிறந்த இவர் தனது சாகச நடிப்பினால் உலகெங்கும் ரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர் அவர் திரைக்கதைகள் எழுதியதுடன், தயாரிப்பு, இயக்கத்திலும் ஈடுபட்டார்.

அவரது சாதனைகளைப் பாராட்டி கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. ஜாக்கி சான் தவிர, பழம்பெரும் ஹாலிவுட் படத் தொகுப்பாளர் ஆன் கோட்ஸ், ஆவணப்பட இயக்குநர் பிரெடரிக் வைஸ்மன் ஆகியோருக்கும் கெளரவ ஆஸ்கர் வழங்கப்பட உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>