ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் சண்டை

பாரமுல்லாவில் கடும் துப்பாக்கிச் சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; 1 ராணுவ வீரர் பலி

பாரமுல்லாவில் கடும் துப்பாக்கிச் சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; 1 ராணுவ வீரர் பலி

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே தீவிரவாதிகளுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவ முகாமில் கடந்த 18ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர். நமது ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் தீவிரவாதிகள் சிலரும் இறந்தனர். இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அமைத்திருந்த 7 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த 28 ம் தேதி தாக்குதல் நடத்தியது. சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற பெயரில் அன்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 வரை தொடர்ந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மற்றொரு ராணுவ முகாமில் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். 46 ராஷ்டிரிய ரைபிள் படையின் தலைமையகம் அருகே குண்டு வீசியபடி ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் பதிலடி கொடுத்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலில் 5 தீவிரவாதிகள் வரை ஈடுபட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும் ராணுவத்தினருடன் இணைந்து பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அதிகாலை வரை தாக்குதல் நடந்ததால் பாராமுல்லா பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் ஜம்முவின் ஆர்எஸ்புரா செக்டார் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் சந்தேகத்திற்கு இடமாக சர்வதேச எல்லையில் சுற்றித்திரிந்த பாகிஸ்தான் நாட்டினர் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் பாகிஸ்தானின் அசிடில்லா பகுதியை சேர்ந்த அபு பக்கர் என்பதும், மற்றொருவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பூஜ் பகுதியை சேர்ந்த முகமது ரஷித் கான் என தெரியவந்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>