சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நலனை மனதில் கொண்டு ஓபிஎஸ் செயல்பட வேண்டும்

o-pannerselvam-10-600-08-1491593267

சென்னை: அதிமுகவில் பிரிந்து செயல்படும் ஓபிஎஸ் தலைமையிலான அணியினரும், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணியினரும் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, இரண்டு அணிகள் இணைந்தாலும் முதல்வர் பதவியில் எடப்பாடி தான் நீடிப்பார் என்றார். அமைச்சர் ஜெயக்குமாரும், ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்யும் வகையில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றிக்கும் ஓபிஎஸ் தான் காரணம்” என்று கூறுவார்கள் என்றார். இதுபோன்ற கருத்துக்களால் ஓபிஎஸ் தரப்பினர் கோபம் அடைந்தனர்.இதற்கு ஓபிஎஸ் தரப்பில் கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்தார். ஓபிஎஸ் தரப்பினர் கருத்தை தொடர்ந்து, நேற்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் தங்கமணி அறையில் கூடி விவாதித்தனர். அப்போது வைத்திலிங்கம் எம்பி மற்றும் சில எம்எல்ஏக்களும் உடன் இருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு வைத்திலிங்கம் எம்பி தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் வந்தால் பேச்சுவார்த்தை நடத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் எதுவும் நிபந்தனை விதிக்கிறீர்களா?
நாங்கள் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. இப்போது சற்று நேரத்திற்கு முன் தொலைக்காட்சியில் பார்த்தபோது, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார். எங்களுடைய ஒரே குறிக்கோள், எண்ணம் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் ஆட்சியை வருகிற 4 ஆண்டுகள் தொடர வேண்டும். கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதித்து ஒன்றுபட்டு, ஒரு நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். எந்த நிபந்தனையும் இல்லை. ஒன்றுபட்டு செயல்படுவதற்கு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.

ஓபிஎஸ் அணியினர் தற்போது இரண்டு நிபந்தனைகள் வைத்துள்ளனர். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? ஜெயலலிதாவின் மரணத்தின்போது ஓபிஎஸ் முதல்வராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் விசாரணை கமிஷன் அமைத்திருக்கலாம். இணைப்பு பற்றி பேச்சு வேகமாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென சுணக்கம் ஏற்பட காரணம் என்ன? ஒரே நோக்கம், ஒரே சிந்தனை ஒன்றுபட்டு தொண்டர்களுக்கு மதிப்பு கொடுத்து இழந்த இரட்டை இலையை மீட்டு ஒரு வலுவான இயக்கமாக 4 ஆண்டுகள் தொடர்ந்து நல்லாட்சி தருவதற்கு நாங்கள் நடவடிக்கையை மேற்கொள்வோம். ஓபிஎஸ் சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து, கட்சியுடைய நலனை கருதி செயல்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணியினர் சில நிபந்தனைகளை வைத்துள்ளார்களே? நிபந்தனை என்பது உட்கார்ந்து பேசினால்தான் தெரியும். செய்திகள் வாயிலாக வருவதையெல்லாம் நிபந்தனையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு வழக்கு போட்டதே அவர்கள்தான். அவர்கள் வழக்கை திரும்ப பெற்றுவிட்டால் எல்லாம் முடிந்து விட்டது. சசிகலாவும், நடராஜனும் இணைந்து டி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைப்பதுபோல் ஒரு நாடகம் நடத்துகிறார்கள் என்று கே.பி.முனுசாமி கூறி உள்ளாரே? எந்த நாடகமும் இல்லை. அவரை விலகும்படி வற்புறுத்தினோம். டி.டி.வி.தினகரனும் மகிழ்ச்சியோடு நான் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்து விட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>