சொந்த செலவில் பாலம் கட்டிய மக்கள்

குடியாத்தம் அருகே சிறுபாலம் அமைக்கும் கோரிக்கையை கடந்த 17 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால், கிராம மக்களே தங்களது சொந்த செலவில் தற்காலிக மூங்கில் பாலம் அமைத்துக் கொண்டனர்.

குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைக்கு அருகே போடியப்பனூர் மற்றும் ராகிமானப்பல்லி கிராமங்கள் உள்ளன. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

போடியப்பனூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 6 முதல் 8-ம் வகுப்பு வரை மோர்தானாவில் உள்ள நடுநிலைப் பள்ளிக்குச் செல்லவேண்டும். மோர்தானா பள்ளியில் சமைக்கப்படும் சத்துணவே போடியப்பனூர் பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 2000-ம் ஆண்டு மோர்தானா அணை கட்டப்பட்டது. அணை நிரம்பி வழியும் நேரத்தில் போடியப்பனூர் கிராம மக்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், போடியப்பனூருக்கு தரைப்பாலம் கட்டித்தரக் கோரி கடந்த 17 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், சில நாட்களாக பெய்த தொடர் மழையால் மோர்தானா அணை நிரம்பியது. போடியப்பனூர் கிராமம் மோர்தானா கிராமத்தில் இருந்து துண்டிக்கப்பட்டது.

மற்ற பகுதிகளிலிருந்து வரும் ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், வரும் டிசம்பர் மாதம் வரை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.14-vlr-03-bamboo-bridge_jakkamma

எனவே, கிராம மக்கள் ஒன்றிணைந்து ரூ.50 ஆயிரம் செலவில் நேற்று தற்காலிக மூங்கில் பாலத்தை அவர்களே அமைத்தனர்.ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் மோர்தானா கிராமத்துக்கு நேற்று வந்து சென்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>