சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

jayasasi_3100228f

புதுடெல்லி : சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி கடந்த மாதம் முதல் வாரத்தில் சசிகலா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு, இன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வருகிறது. வருமானத்திற்கு அதிமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்துவிட்டு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், தனக்கு வழங்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும் வலியுறுத்தி கடந்த மாதம் முதல் வாரத்தில் மூன்று பேரின் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நிலுவையில் இருந்து வந்த இந்த சீராய்வு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. இந்த சீராய்வு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகிந்தன் பாலிநாரிமன் மற்றும் அமித்தவராய் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மனுவை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து நீதிபதிகள் இன்று உத்தரவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது கணக்கு குழு 4ம் தேதி விசாரணை

பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியது உண்மைதான் என்று பேரவை பொது கணக்கு தணிக்கை குழுவிடம் சிறைத்துறை கூடுதல் டிஜிபி மெஹரிக் ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் பேரவை பொது கணக்கு தணிக்கை குழுவினர், சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஆக.4ம் தேதி சிறைக்கு செல்லும் அவர்கள் சசிகலாவிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>