சேலம் கட்சராயன் ஏரியை தூர்வார முயற்சி: கிராம மக்கள் எதிர்ப்பு

2017-29-07-10-40-29

சேலம்: ஏற்கனவே திமுகவினர் தூர்வாரிய கட்சராயன் ஏரியை தற்போது அதிமுகவினர் தூர்வாரி வருகின்றனர். இதனை கண்டித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய கிராம மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக செயல் தலைவர் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை தூர்வார வேண்டும், சீரமைக்க வேண்டும் என்று திமுகவினருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் தான் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சேலம் மாவட்டம் முதல்வராக இருக்கும் பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில் உள்ள கட்சராயன் ஏரி கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்தது.

இந்த ஏரியை கிராம மக்கள் மற்றும் திமுகவினர் இணைந்து 20 நாட்களாக இதனை சீரமைத்தனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த ஏரியை பார்வையிடுவதற்காக வரும் போது, அவரை வரும் வழியிலேயே போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் திமுக சீரமைத்த ஏரியை, அதிமுகவினரை விட்டு மண் அள்ள மனுமதி கொடுத்து கடந்த 3 நாட்களாக அதிமுகவினர் மண் அள்ளி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் வண்டல் மண்ணை அள்ள வேண்டும் என்ற ஆணை இருக்கும் போது, இப்பகுதியில் வண்டல் மண் இல்லாத நிலையில் முரம்பு மண்ணை அவர்கள் வேண்டுமென்றே 10 அடி, 20 அடி ஆழத்துக்கு வெட்டி எடுத்துச் செல்கின்றனர்.

இது தான் கிராம மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக திமுகவும், பொதுமக்களும் இணைந்து புரணமைத்திருந்த நிலையில் அதிமுகவினரை விட்டு ஆளும்கட்சியினர் இந்த ஏரியில் மண்ணை எடுத்துக் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக ஒரு லோடு மண் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த ஏரியை சேதப்படுத்திவிட்டனர். எனவே தான் நாங்கள் இந்த ஏரியை அதிமுகவினர் மீண்டும் தூர்வார கூடாது என்ற வகையில் தான் தற்போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அங்கு இருக்கக்கூடிய பொக்கில் இயந்திரங்களை வெளியேற்ற வேண்டும் என்ற வகையில் தான், ஊர்மக்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களும், விவசாயிகளும், திமுகவினரும் இணைந்து 20 நாட்களாக தூர்வாரிய ஏரியை கடந்த 4 நாட்களாக அதிமுகவினர் வேண்டுமென்றே ஏரி்க்குள் நுழைந்து மண்ணை அள்ளுகிறேன் என்ற பெயரில் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு நாளுக்கு பொக்கிலின் கொண்டு மண்ணை அவர்கள் லோடு லோடாக அள்ளிக் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் கிராம மக்கள் இன்று வெகுண்டெழுந்து அவர்களாகவே காலை 7 மணி முதலே ஏரிக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பொக்கிலின் இயந்திரத்தை சிறைபிடித்து இங்கு மண் அள்ளக்கூடாது என்று தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொக்கிலின் இயந்திரத்தை நிறுத்திவிட்டு, மண் அள்ளிக் கொண்டிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு அமைதி காத்துக் கொண்டு இருக்கின்றனர். கிராம மக்கள் பொறுத்தவரை இங்கிருந்து இனிமேல் ஒரு துளி மண் கூட எடுக்கக்கூடாது, அவ்வாறு எடுத்துச் சென்றால் நாங்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>