சேலத்தில் கோலாகலம்: பாரம்பரியம் மிக்க வண்டி வேடிக்கை

சேலத்தில் கோலாகலம்: பாரம்பரியம் மிக்க வண்டி வேடிக்கை

சேலத்தில் கோலாகலம்: பாரம்பரியம் மிக்க வண்டி வேடிக்கை

சேலம்: சேலம் கோயில்களின் ஆடிப்பெருவிழாவின் உச்சகட்டமாக இரவு பாரம்பரியம் மிக்க வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதனை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் மற்றும் சுற்றியுள்ள 18 பட்டி மாரியம்மன் கோயில்களிலும் ஒரே நேரத்தில் ஆடி மாதத்தில் 22 நாள் திருவிழா நடத்தப்படுகிறது. அனைத்து கோயில்களிலும் பொங்கல், உருளுதண்டம் போடுதல் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நகரில் 3 நாட்கள் நடைபெறும் பாரம்பரியம்மிக்க வண்டி வேடிக்கை துவங்கியது.

இதில் குகை காளியம்மன் மாரியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை உலக பிரசித்தம் பெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து தெய்வவேடம் அணிந்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் கோயிலுக்கு ஊர்வலமாக வருவதே வண்டி வேடிக்கையாகும். 111 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த வண்டி வேடிக்கை நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. சேலம் குகை ஆண்டிசெட்டி தெருவை சேர்ந்த குழுவினர் வாமன அவதாரத்தில் வந்தனர். இதில் மகாபலி மன்னன் தன் துணைவியோடு யாகசாலையில் யாகம் செய்து கொண்டிருக்கும் போது, மன்னனிடம் தானம் பெறும் காட்சியை அமைத்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

குகை இளைஞர்குழு புலிக்குத்தி தெரு வண்டிவேடிக்கை குழு சார்பில் 46வது ஆண்டாக வண்டி வேடிக்கையில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கிய அன்னை அபிராமி அளிக்கும் காட்சியை ஆண் பக்தர்கள் ெதய்வவேடம் அணிந்து வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதுபோல 20க்கும் மேற்பட்ட தெய்வ வேடங்கள் அணிந்து வந்த வண்டிகள் ஊர்வலமாக குகை மாரியம்மன் கோயிலுக்கு வந்தது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தெய்வங்கள் நீந்தி வந்த காட்சி அற்புதமாக இருந்தது. இதில் சிறந்த வண்டிகளை, விழா குழுவினர் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று இரவு அம்மாபேட்டையில் வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>