சேகர் ரெட்டி பணம் கொடுத்ததை நிரூபிக்க முடியாது:அமலாக்கத் துறை

சேகர் ரெட்டிக்கு மட்டும் ரூ.33 கோடிக்கு புதிய நோட்டுகள் எப்படி கிடைத்தன என்ற விவரத்தை தங்களால் விசாரித்து அறிய முடியவில்லை என்று நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

சேகர் ரெட்டிக்கு மட்டும் ரூ.33 கோடிக்கு புதிய நோட்டுகள் எப்படி கிடைத்தன என்ற விவரத்தை தங்களால் விசாரித்து அறிய முடியவில்லை என்று நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை
சேகர் ரெட்டியின் டைரியை விசாரணைக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அமலாக்கத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை என்றும், யாருடைய டைரியை கைப்பற்றினார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் மணல் குவாரி ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியின் மணல் குவாரி அலுவலகம் மற்றும் வீடுகளில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் ரூ.33.6 கோடி புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கட்டு உள்பட ரூ.131 கோடி ரொக்க பணம், 177 கிலோ தங்கம் மற்றும் ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டன. சேகர் ரெட்டியின் பெரிய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த டைரியில் யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தை சேகர் ரெட்டி எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.இதனிடையே அண்மையில் இந்த டைரியின் புதிய 6 பக்கங்களை ஆங்கில வார பத்திரிகையும், தனியார் தொலைக்காட்சி ஒன்றும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தமிழக அரசில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் எழுதப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்போது வெளியாகி உள்ள டைரியின் பக்கங்கள் எப்படி ஊடகங் களுக்கு கிடைத்தன என்பது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.அமலாக்கத்துறை வட்டாரத்தில் கூறுகையில், அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணம் கொடுத்ததாக எழுதப்படும் குறிப்புகள் விசாரணைக்கு உதவாது. இதை நிரூபிப்பது கடினமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இதனிடையே உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட அடுத்த மாதத்தில் புதிய ரூபாய் நோட்டுக்காக பொதுமக்கள் வங்கிகளில் காத்து நின்றனர். இந்த சமயத்தில் சேகர் ரெட்டிக்கு மட்டும் ரூ.33 கோடிக்கு புதிய நோட்டுகள் எப்படி கிடைத்தன என்ற விவரத்தை தங்களால் விசாரித்து அறிய முடியவில்லை என்று நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>