செவாலியே விருது ஒரு பார்வை

 மாவீரன் நெப்போலியன், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளில் வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்காக துவங்கியதுதான் இந்த செவாலியே விருது.1802-ம் ஆண்டிலிருந்து இவ்விருது எல்லாத்துறை வல்லுனர்களுக்கும் வழங்கப்படுகிறது.செவாலியே விருது பெற்ற கலைஞர்கள், பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அரசாங்க பிரதிநிதிகளுக்கு சமமானவர்கள்.

மாவீரன் நெப்போலியன், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளில் வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்காக துவங்கியதுதான் இந்த செவாலியே விருது.1802-ம் ஆண்டிலிருந்து இவ்விருது எல்லாத்துறை வல்லுனர்களுக்கும் வழங்கப்படுகிறது.செவாலியே விருது பெற்ற கலைஞர்கள், பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அரசாங்க பிரதிநிதிகளுக்கு சமமானவர்கள்.

செவாலியே விருது: ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையுடன் வலம் வரும் கலைஞர்கள் அரிதினும் அரிது. அந்த பட்டியலில் தனியிடம் பிடித்தவரான நடிகர் கமல்ஹாசனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ் மொழி சினிமாக் கலைஞர்களில் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு மட்டுமே செவாலியே அந்தஸ்து கிடைத்திருந்தது. இந்நிலையில், நடிகர் திலகத்தைத் தொடர்ந்து, உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமலுக்கும் வழங்கப்பட உள்ள இந்த செவாலியே விருது, அவரது திரைப்பயணத்தில் மைல்கல்லாய் மாறியுள்ளது.

எனினும், சினிமா தவிர செவாலியே விருது பெற்ற பல்துறை சார்ந்த கலைஞர்கள் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், மக்கள் கலை ஊடகம் என்பதில் இங்கே சினிமாவுக்குத்தான் முதலிடம்.

செவாலியே விருது குறித்தும், அதற்கான அங்கீகாரத்தினைப் பெற்றிருக்கும் வெவ்வேறு துறை வல்லுனர்கள் குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

செவாலியே விருது:

* மாவீரன் நெப்போலியன், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளில் வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்காக துவங்கியதுதான் இந்த செவாலியே விருது.

* 1802-ம் ஆண்டிலிருந்து இவ்விருது எல்லாத்துறை வல்லுனர்களுக்கும் வழங்கப்பட ஆரம்பித்தது.

* பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை, சர்வதேச அளவில் துறை சார்ந்த சிறப்பியல்புகளுடன் மிளிரும் பிரபலங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.

* பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் அமைந்திருக்கும் அதிபர் மாளிகையான எல்சீ அரண்மனையில் சிறப்பு விருந்துடன், இந்த விருது அளிக்கப்படும். அல்லது, விருது வழங்கும் நடுவர்கள் மற்றும் அரசு பிரமுகர்கள் நமது நாட்டிற்கே நேரடியாக வந்தும் இந்த விருதினை அளிப்பார்கள்.

* செவாலியே விருது பெற்ற கலைஞர்கள், பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அரசாங்க பிரதிநிதிகளுக்கு சமமானவர்கள்.

* அந்நாட்டு ராணுவ வீரர்கள் விருது பெற்றவர்களை ‘சார்’ மற்றும் ‘மேம்’ என்று உரிய மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டம்.

* செவாலியே விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் பிரபலங்கள், அந்தந்தத் துறையில் 25 வருடங்கள் சேவையாற்றியிருக்க வேண்டியது அவசியம்.

* சிவப்பு நிற ரிப்பனில் 5 பக்கங்கள் கொண்ட ஓக் மர வடிவமைப்பைக் கொண்டிருக்கும் செவாலியே பதக்கம். பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடி நடுவில் இரட்டையாக அமைக்கப்பட்டிருக்கும்.

* இதுவரையில் சர்வதேச அளவில் 93,000 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினைச் சேர்ந்த 400 பேர், வருடாவருடம் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

* நடிப்புத் துறையில் தனக்கான ஒரு முத்திரையுடன் சிறந்து விளங்கியதற்காகவே நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கும், நடிப்புத் துறையுடன் கூடிய பன்முக ஆளுமைத்தன்மைக்காக நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இவ்விருதினைப் பெற்ற சில பிரபலங்கள்:

ஜே.ஆர்.டி.டாட்டா – 1983 (தொழில் துறை)

சத்யஜித்ரே – 1987 (சினிமா)

சிவாஜி கணேசன் – 1995 (சினிமா)

ஜூபின் மேத்தா – 2001

எம்.பாலமுரளிகிருஷ்ணா – 2005 (இசை)

அமிதாப்பச்சன் – 2007(சினிமா)

ஐஸ்வர்யா ராய் – 2012(சினிமா)

ஷாரூக்கான் – 2014 (சினிமா)

யஸ்வந்த் சின்ஹா – 2015 (நிதி நிபுணத்துவம்)

மனிஷ் அரோரா – 2016 (ஆடை வடிவமைப்பு)

இந்த மதிப்பிற்குரிய விருது வரிசையில் புதியதாக இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் என்பது இந்தியாவிற்கு கிடைத்துள்ள மற்றுமொரு கவுரவம்!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>