சென்னை விமானநிலையம் – சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் ஜெ.ஜெயலலிதா

2016-21-9-15-22-24m

சென்னை: சென்னை விமானநிலையம் – சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார். விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி மற்றும் சின்னமலை ரயில் நிலையங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை இன்று திறந்துவிடப்படுகின்றன. இந்த விழாவில் சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த விழாவில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை விமானநிலையம் – சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, சென்னையின் இரண்டாவது மெட்ரோ ரயில் வழித்தட துவக்க விழாவில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் இந்த மெட்ரோ ரயில் சேவையால் சென்னை நகர மக்கள் மிகுந்த பயனடைவர் என்றார். இந்த சேவையை முதல்வர் துவக்கி வைப்பது பெருமைக்குரியது என்ற மத்திய அமைச்சர், மெட்ரோ ரயில் சேவையால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார்.
இந்த வழித்தடம் சென்னை விமான நிலையத்தை இணைக்கும் முக்கியமான வழித்தடம் என்று குறிப்பிட்ட வெங்கய்ய நாயுடு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுஒத்துழைப்பு வழங்கும் என்றார். தமிழக மக்கள் பயன் பெறும் வகையில் விரைவில் ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறும் என குறிப்பிட்டார்.

பின்னர் தலைமைசெயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற ஜெயலலிதா பேசினார். அப்போது பேசிய அவர் தாம் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்திற்கு தேவையான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மத்திய அரசிடம் இதற்காக தொடர்ந்து பேசி வருவதாகவும், மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் காணொலிக் காட்சி மூலம் பச்சை நிற கொடியை அசைத்து சென்னை விமானநிலையம் – சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

முன்னதாக கடந்த 2, 3 மாதங்களாகவே தொடர்ச்சியாக இந்த பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 10,000 பக்கங்களுக்கான ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. முக்கியமாக மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்ட பின்பு, முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த துவக்கத்தின் போது முக்கியமாக சொல்லப்பட்ட விஷயம் கட்டணம் அதிகளவில் இருப்பது. தற்போது விமான நிலையம் முதல் சின்னமலை வரை எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்ய இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் தற்போது கோயம்பேடு – சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பயணத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் முன்னதாக முதலில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு ரூ.40 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரு வழித்தடங்களில் சென்னையில் மெட்ரோவில் 45 கிமீ தொலைவிற்கு சுரங்கபாதை வழியாகவும், மேல்மட்ட வழியாகவும் நடைபெற்று வருகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>