சென்னை ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளைபோன வழக்கு : பணப்பெட்டிகளை ஏற்றிய 8 பேரிடம் அதிகாரி விசாரணை

ஒரு வாரம் ஆகும் நிலையில், சிறிய துப்பு கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். சிபிசிஐடி போலீசாரும், இவ்வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே சரியான துப்பு கிடைக்காமல் திணறலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு வாரம் ஆகும் நிலையில், சிறிய துப்பு கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். சிபிசிஐடி போலீசாரும், இவ்வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே சரியான துப்பு கிடைக்காமல் திணறலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சேலம்: ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை போன வழக்கில் வங்கி பணப்பெட்டிகளை ஏற்றிய 8 பேரிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரி அமித்குமார் சிங் விசாரணை நடத்தினார். சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு வங்கி பணம் ரூ.5.78 கோடி கொள்ளையில் துப்புதுலக்க சிபிசிஐடி போலீஸ் ஐஜி மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் 16 மாவட்ட சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்.பி.யாக நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் அமித்குமார் சிங்கை நியமித்துள்ளனர். அவர் நேற்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளார்.

அவருக்கு உதவியாக 3 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு புலனாய்வு குழு, சிபிசிஐடி அதிகாரிகளுடன் இணைந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி. அமித்குமார் சிங், நேற்று சேலம் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, ரயில் பெட்டியில் வங்கி பணப்பெட்டிகளை ஏற்றிய தனியார் பார்சல் நிறுவன ஏஜென்ட் லோகநாதன் மற்றும் 7 ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதியும் உடன் இருந்தார். தனித்தனியாக நடந்த விசாரணையில், இதற்கு முன்பு இதேபோல் வங்கி பணப்பெட்டிகளை ஏற்றி அனுப்பிய விவரங்களை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பணப்பெட்டிகளை வைத்தபோது, ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஏதாவது கீறல்கள் இருந்ததா?

கூட்ஸ் செட் பகுதியில் சந்தேகப்படும்படி யாராவது சுற்றித்திரிந்தார்களா என விசாரித்தனர். ஏஜென்ட் உள்ளிட்ட 8 ஊழியர்களின் செல்போன்களையும் ஆய்வு செய்தனர். சம்பவத்தன்று அவர்கள் யாருக்கெல்லாம் பேசியிருக்கிறார்கள், அவர்களில் யாருக்காவது கொள்ளையில் தொடர்பு இருக்கலாமா என விசாரணை நடக்கிறது. இதனிடையே அந்த ரயில் பெட்டிக்கு பாதுகாப்பாக சென்ற மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்ஐ ஆனந்தன், ஏட்டுகள் கோவிந்தராஜ், சுப்பிரமணி, போலீஸ்காரர்கள் செந்தில்குமார், பெருமாள், ரமேஷ், கணேசன் ஆகிய 9 பேரிடமும் எஸ்.பி. அமித்குமார் சிங் தனித்தனியே விசாரித்தார்.

எழும்பூர் யார்டு பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் பெட்டியை நிறுத்தி வைத்திருந்தபோது, எங்கிருந்தீர்கள் என விசாரித்தார். மேலும் பாதுகாப்பு பணியின்போது, கையாளப்பட்ட ஆவணங்களையும் பரிசோதித்தார். இவர்களின் மெத்தனப்போக்கால்தான் கொள்ளை நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. 9 பேரின் செல்போன்களில் பதிவாகியுள்ள எண்களை கொண்டு, எஸ்.பி.க்கள் அமித்குமார் சிங், நாகஜோதி ஆகியோர் 2ம் கட்ட விசாரணையை நடத்தியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இவர்களிடம் விசாரணை நடந்துள்ள நிலையில் எஸ்பிக்களின் இந்த விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 9 போலீசாரின் முழு விவரங்களையும் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி விஜயராகவன் தலைமையிலான குழு சேகரித்தது.

சேலம் அழகாபுரம் ஐஓபி வங்கி அதிகாரிகளிடம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு விசாரித்தது. ஈரோடு லோகோ ஷெட் ஊழியர்கள், சேலம் பார்சல் பிரிவு ஊழியர்களிடமும் டிஎஸ்பி முத்துச்சாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணை தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆரம்ப கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளோம். இதுவரையில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. எப்படியும் இன்னும் ஓரிருநாளில் கொள்ளையர்கள் யாரென கண்டுபிடித்துவிடுவோம்,’’ என்றனர். அதேநேரத்தில், சென்னையில் எஸ்பி ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் யார்டில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாம்பரம், எழும்பூரில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயில் வந்ததையும் அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

சேலத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமையன்று வங்கி பணம் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டது. செவ்வாய்க்கிழமை மதியம் தான், ரூ.5.78 கோடி கொள்ளை போனது தெரியவந்தது. முதலில் ஆர்பிஎப் போலீசாரும், பின்னர் தமிழக ரயில்வே போலீசாரும் விசாரித்த நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றியுள்ளனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், சிறிய துப்பு கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். சிபிசிஐடி போலீசாரும், இவ்வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே சரியான துப்பு கிடைக்காமல் திணறலுக்கு உள்ளாகியுள்ளனர்.ஒரு வாரம் ஆகும் நிலையில், சிறிய துப்பு கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். சிபிசிஐடி போலீசாரும், இவ்வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே சரியான துப்பு கிடைக்காமல் திணறலுக்கு உள்ளாகியுள்ளனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>