சென்னையில் லஞ்சம் வாங்கியவர் கைது

விற்பனை பத்திரம் அளிக்க 5ஆயிரம் லஞ்சம் கேட்ட கே.கே.நகர் குடிசை மாற்று வாரிய இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலிசார் கைது செய்தனர்.

சேலையூரைச் சேர்ந்த சிவாஜி என்பவர் விற்பனை பத்திரம் பெருவதற்காக கே.கே.நகர் குடிசை மாற்று அலுலவகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிவரும் லெனினை அணுகியுள்ளார்.

விற்பனை பத்திரம் பெருவதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைமையிடத்திற்கு அனுப்பி அதற்குண்டான பணியினை செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து சிவாஜி லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து இன்று மாலை சிவாஜி, கே.கே.நகர் குடிசை மாற்றி வாரிய அலுவலகத்தில் வைத்து லெனினிடம் லஞ்ச பணம் 5 ஆயிரம் கொடுக்கும்போது, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் லெனினை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவரது அலுவலகத்தில் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 1லட்சத்து 20ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இளநிலை உதவியாளர் லெனின் கைது செய்யப்பட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>