சென்னை:பைக் ரேஸ் ஓட்டிய 19 பேர் கைது.

images

சென்னை,டிச.4: பைக் ரேஸில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அடையாறு சத்யா ஸ்டூடியோ பகுதியில் இரவு உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சாலை விதிமுறைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 31 பேரை பிடித்தனர். அதில் 11 பேர் அதிவேகமாக பைக்கை ஒட்டி பந்தயத்தில் ஈடுபடுவதை போல சென்றவர்களை போலீசார் வளைத்து பிடித்து அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 15 பேரும் விசாரணையில் மாணவர்கள் மற்றும் பைக் மெக்கானிக் என தெரியவந்துள்ளது. மற்ற 20 பேருக்கு அபராதம் விதித்து போலீசார் அனுப்பி வைத்தனர். பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிகிறது.

இதே போன்று ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் வேகமாக மீனம்பாக்கம் சென்ற 3 கார்கள் போட்டியிட்டுக் கொண்டு சென்றதில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால் கார்கள் சேதமடைந்தன. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட கிண்டி போக்குவரத்து போலீசார் விபத்துக்கு காரணமானவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>