சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரி தண்ணீரின்றி வறண்டது: புழல் ஏரிக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தம்

Daily_News jakkamma

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி தண்ணீரின்றி வறண்டது. 881 மில் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 6 மில் கன அடி நீரே உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் புழல் ஏரிக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே குட்டை போல தேங்கியுள்ள எஞ்சிய நீரை குடிநீருக்காக பயன்படுத்த முடியுமா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் சோழவரம் ஏரி நீரின்றி வறண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோடைகாலம் தொடங்குவதற்பு முன்பே சோழவரம் ஏரி வறண்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>