சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் சிறையில் ‘மரணம்’

ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதன் கீழ் உள்ள காவல்துறை மற்றும் சிறைத்துறையின் நிர்வாகமும் மிகவும் மோசமடைந்து சீர் குலைந்து விட்டது என்பதற்கு பேரறிவாளன் மீதான கொடூரத் தாக்குதலும், ராம்குமார் மர்ம மரணமும் சாட்சியங்களாக இருக்கின்றன என்று கூறியிருக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமெனத் தெரிவித்திருக்கிறார்.

சென்னை ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்சுவாதி என்ற இளம்பெண் காலை நேரத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தபோது அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் ஜூலை 1ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் காவல்துறை கைதுசெய்தது. காவல்துறை ராம்குமார் வீட்டை சுற்றி வளைத்ததும் அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைசெய்துகொள்ள முயற்சித்ததாகவும் காவல்துறை கூறியது.
சுவாதியை நீண்ட காலமாகப் பின்தொடர்ந்த ராம்குமார், இந்தக் கொலையைச் செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. அவர் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கழமை மாலை நான்கே முக்கால் மணியளவில் சிறையில் சமையல் செய்யும் பகுதியில் உள்ள மின்சாரக் கம்பியைக் கடித்ததால் ஆபத்தான நிலையில் இருந்த ராம்குமார் முதலில் சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன் பிறகு அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது இறந்துவிட்டதாக சிறைத்துறை தெரிவித்திருக்கிறது.
அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை, அங்கிருந்த யாரும் பார்த்தார்களா என்பது இதுவரை தெளிவாகவில்லை. இது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக சிறைத்துறை தெரிவித்திருக்கிறது.
அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ராம்குமார் நீதிமன்றக் காவலில் இறந்திருப்பதால் இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை நடத்தக் கோரிக்கை
இந்த நிலையில் ராம்குமாரின் உடலைப் பார்க்க அவரது வழக்கறிஞர் ராம்ராஜிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவரது தரப்பினர் ராயப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊடகங்களிடம் பேசிய ராம்ராஜ், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால் நீதிவிசாரணை நடத்த வேண்டுமெனக் கூறினார்.
திருநெல்வேலியில் உள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவம், தன்னுடைய மகன் இறந்ததை நம்பமுடியவில்லை என்றும் இது திட்டமிட்ட படுகொலை என்றும் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதன் கீழ் உள்ள காவல்துறை மற்றும் சிறைத்துறையின் நிர்வாகமும் மிகவும் மோசமடைந்து சீர் குலைந்து விட்டது என்பதற்கு பேரறிவாளன் மீதான கொடூரத் தாக்குதலும், ராம்குமார் மர்ம மரணமும் சாட்சியங்களாக இருக்கின்றன என்று கூறியிருக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமெனத் தெரிவித்திருக்கிறார்.
சிறைத் துறையின் பாதுகாப்பில் இருந்த ராம்குமார் மரணம் அடைந்தது எப்படி என உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டுமெனக் கூறியிருக்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>