சுப்ரீம் கோர்ட்டில்: ஆதார் அடையாள அட்டை அந்தரங்க தகவல் உரிமை, அடிப்படை உரிமை அல்ல மத்திய அரசு

201707280325547666_Privacy-information-is-not-a-fundamental-right_SECVPF

ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்கில், தனிமனிதர்களின் அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையா, இது அரசியல் சாசன கட்டமைப்பில் ஒரு அங்கமா என்பதை தீர்மானிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கி‌ஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.

இந்த அமர்வு தனது விசாரணையை கடந்த 19–ந் தேதி தொடங்கியது.

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நேற்று முன்தினம் தனது வாதத்தைத் தொடங்கினார். அவர் அப்போது, ‘‘அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையாக இருக்கலாம். ஆனால் அது கட்டுக்கடங்காத ஒன்றாக இருக்க முடியாது’’ என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் 2–வது நாளாக அவர் தனது வாதத்தை நேற்று தொடர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை அல்ல. அது அடிப்படை உரிமை என்று எடுத்துக்கொண்டாலும் கூட, அது பன்முகத்தன்மை கொண்டதாகும். அதன் காரணமாக ஒவ்வொரு அம்சமும், அடிப்படை உரிமை ஆக முடியாது.

அந்தரங்க தகவல் உரிமை, அடிப்படை உரிமை ஆகி விட முடியாது. இது ஒருபோதும் அடிப்படை உரிமை கிடையாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவிக்கையில், ‘‘ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன என்று வேண்டுமானால் அரசாங்கம் கேள்வி கேட்கலாம். ஆனால் அதே நேரத்தில், எத்தனை முறை அந்தப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பி அதற்கு பதில் அளிக்க கட்டாயப்படுத்த முடியாது’’ என்று கூறியது.

‘‘அந்தரங்க உரிமை என்பது பொதுவான சட்ட உரிமை என்பதற்கும், அடிப்படை உரிமை என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?’’ என்று கூறுமாறு அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘ஒரு உரிமையியல் வழக்கை தொடர்ந்து, பொதுவான சட்ட உரிமையை செயல்படுத்திவிட முடியும். அதுவே அடிப்படை உரிமை என்றால், ‘ரிட்’ வழக்காகத்தான் கோர்ட்டு செயல்படுத்த முடியும்’’ என கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>