சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

நிலத்தடி நீரில் 80% குரோமியம், காட்மியம், தோரியம், சல்பேட், ஈயம் போன்ற கொடிய நச்சு வேதிப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 2015 மார்ச்சில் கடலூரைச் சேர்ந்த மீனவர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

நிலத்தடி நீரில் 80% குரோமியம், காட்மியம், தோரியம், சல்பேட், ஈயம் போன்ற கொடிய நச்சு வேதிப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 2015 மார்ச்சில் கடலூரைச் சேர்ந்த மீனவர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

கடலூர் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள கிராமத்தினருக்கு உடனடியாக சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடலூரில் 1985ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட இரசாயனத் தொழிற்சாலைகள் அங்கு செயல்படுகின்றன.
சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தொடர்ச்சியாக பல நோய்கள் வந்ததையடுத்து அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து ஆர்.டி.ஐ மூலம் 2014ல் பெற்ற தகவலில் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மிக மோசமாக மாசடைந்தது தெரிய வந்தது. குறிப்பாக நிலத்தடி நீரில் 80% குரோமியம், காட்மியம், தோரியம், சல்பேட், ஈயம் போன்ற கொடிய நச்சு வேதிப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 2015 மார்ச்சில் கடலூரைச் சேர்ந்த மீனவர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று வரை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், சிப்காட் நிர்வாகம்,தமிழக அரசாங்கம் என யாருமே பதிலளிக்கவில்லை.இந்த வழக்கு இன்று தென்மண்டல தேசியப்பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதிபதி ஜோதிமணி மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர் பி.எஸ்.ராவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ரித்விக் தத்தா ஆஜராகியிருந்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் கேட்டிருந்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பின்னர் ” உடனடியாக சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும், அதற்கான செலவை சிப்காட் வளாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 29ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்வேதா ” இந்தத்தீர்ப்பை வரவேற்பதாகவும், கடலூர் சிப்காட்டில் மாசுபாடடைந்த நிலத்தடி நீர் முழிவகையும் சிப்காட் நிர்வாகமே சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>