சுடலைக் கேட்ட படைப்புச் சோறு அ.கா.பெருமாள்

nattar daivam   ‘முத்தாரம்மன் சுத்த சைவம். எனவே வடை, பருப்பு சாம்பார் அவியல், புளிசேரி, எரிசேரி, கட்டித் தயிர் பச்சடி, கிச்சடி, பொரியல், துவரன், உப்பிலிடு வகைகள் அம்பாரமாகக் குவிக்கப்பெற்ற பச்சரிசிச் சோற்றின் மீது கொட்டப் பெற்றன. சோற்றுக் கூம்பின்மீது பப்படம் பாவப்பட்டது.சாய்ந்த தென்னம்பாளைக் கீற்றுகளில் வெள்ளைத் துணி சுற்றி நெய்யில் நனைத்த பந்தங்களும் ஊதுபத்திகளும் படையல் மீது சொருகப் பெற்றன.

 

Logo Adbகத

 

மற்ற தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் அசைவப் படைப்புகள், குளத்து மீன் கறி,                                அவித்த            முட்டைகள், கோழி, ஆட்டுக்கறி, தீயில் சுட்ட அயிலைக் கருவாடு                                   படைத்தவர்கள்  வாயில்  வெள்ளைத் துணிகளைக் கட்டிக்                                                                                 கொண்டு  மூச்சுவிடாமல்”

நாஞ்சில் நாடானின் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்” சிறுகதையில் வரும்  பகுதி                         இது. இந்தக் கதையில் வரும் வில்வமங்கலம் வேளாளரின்                                                                                முத்தாரம்மனைப் போன்ற வள்தான்     மற்ற ஊர்                                                                                                        வேளாளரின் முத்தாரம்மனும்  பிற   சாதியினரின் முத்தாரம்மனும்.

நாஞ்சில் நாட்டு நாட்டார் தெய்வங்கள் எல்லாம் ஒரு காலத்தில் சுத்த அசைவ                                     உணவை  மட்டுமே ஏற்றுக்கொண்டு வாழ்ந்தன. இப்போதெல்லாம் நிலை                                             தலைகீழாக    மாறிவிட்டது.        முத்தாரம்மனைப் போன்ற சமூக அந்தஸ்துள்ள                                அம்மன்கள் வெகு    வேகமாக சைவச்  சாப்பாடே வேண்டும் என்று கேட்க                                                                                                                                                 ஆரம்பித்துவிட்ட .   சுடலைமாட சாமிகளில்   சிலர்கூடச்      சைவத்துக்கு                                                                                                                                                      மாறி விட்டனர்.  இப்படியாக மாறியதற்கு அம்மன்களுக்கும் மாடன்களுக்கும்                                                                                                                                         அஜீரணக்கோளாறோ வாயுத் தொல்லையோ காரணமல்ல.

 

இதற்கெல்லாம் சரியான காரணத்தை கண்டுபிடித்து சொல்ல முடியாது. எல்லாச் செயல்பாடுகளும் மாறியதன் விளைவோ வினையோ என்னவோ? புதுமைப்பித்தன் சொல்வதைப் போல கால விஷேசம் காரணமாக இருக்கலாம். ஆராய்ச்சியாளர்களிடம் இதைப் பற்றிக் கேட்டால் சமஸ்கிருத மயமாக்கல், பிராமணமயமாக்கல், மேல்நிலையாக்கம் என்னும் சொற்களை பிரயோகித்து வியாக்கியானம் தருவார்கள். எந்த முத்தாரம்மனும் சுடலைகளும் மேல்நிலையாக்க வேண்டுமென யாரிடமும் விண்ணப்பமும் செய்யவில்லை

 

.   kaaval_theivam

 

நாட்டார் தெய்வங்களின் வழிப்பாடு, விழா, சடங்குகள், கோவில் அமைப்பு, முக்கியத் தெய்வ வடிவம், நிகழ்த்துக் கலைகள், நிகழும் முறை ஆகிய மாறியது போலவே உணவுப் பழக்கங்களும் மாறிவிட்டன. தமிழகத்தில் இப்படியாக மாறும் கலாச்சாரத்துக்கு எப்போதுமே நாஞ்சில் நாடு முதலில் பச்சைக்கொடி காட்டி வருகிறது. இதற்கு காரணம் கேரளப் பாதிப்பு என்றும் அதிக அளவில் படித்தவர் வாழும் பகுதி என்றும் எடுத்துக்கொள்ளலாம். நாட்டார் தெய்வக் கோயிலைப் புனரமைப்புச் செய்வதற்குப் பிரசன்னம் பார்த்தல் என்னும் நிறுவன தெய்வக் கோயில் நியதியை அனுசரிப்பது நாஞ்சில் நாட்டில் இப்போது சகஜமாகிவிட்டது.

 

 

0 கோயிலின் கட்டடம், பரிவாரத் தெய்வங்களை வைக்குமிடம், சடங்குகள் போன்றவற்றைத் தீர்மானிப்பவர்களாய்ப் பிரசன்னம் பார்க்கும் நம்பூதிரிகளோ அவர்களைப் போன்றவர்களோ இருக்கும் போது சாமியின் சாப்பாடு விஷயங்களில் எப்படி விதி விலக்களிக் முடியும். எதிர்காலத்தில் பரோட்டா, சப்பாத்தி, நாண், நூடுல்ஸ் போன்றவை படைக்கப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை

 

.     பாவேந்தர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>