சீரமைக்கப்படாத டெல்டா குளங்கள்:கதிர்வரும் நிலையில் பயிர்கள்விவசாயிகள்கவலை

வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத்துறை, ஊராட்சி மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இக்குளங்கள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத்துறை, ஊராட்சி மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இக்குளங்கள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

வலங்கைமான்: டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலங்களில் கிடைக்கும் உபரி நீரினை சேமிக்க அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்வது இல்லை. தற்போது காலதாமதமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டு முன்கூட்டியே மூடப்படுகிறது. இவ்வாறு கதிர்வரும் நிலையில் பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் போவது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எனவே இக்குறைகளை களையும் பொருட்டு பாசன வாய்க்கால்கள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள குளங்கள், ஏரிகளை உடனடியாக தூர்வார வேண்டும். குளங்கள், ஏரிகளுக்கு நீர் வரக்கூடிய வழித்தடங்களையும் தூர்வார வேண்டும்.

வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத்துறை, ஊராட்சி மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இக்குளங்கள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக குளங்கள் முழுவதும் காட்டாமணக்கு செடிகளால் மூடப்பட்டு காணப்படுகிறது. மேலும் குளங்களுக்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தால் வடகிழக்கு பருவமழை காலங்களில் கூட தண்ணீர் நிரம்புவது இல்லை. எனவே டெல்டா மாவட்டங்களில் முதல் கட்டமாக அதிக பரப்பளவு கொண்ட குளங்களினை கிராம ஊராட்சி மற்றும் அறநிலையத்துறை மூலம் அடையாளம் கண்டு அரசு முழுமையாக தூர்வார வேண்டும்.

சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அரை ஏக்கர் அளவிற்கு உள்ள குளத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு சுழற்சி முறையில் அறுவடைக்கு முன்பாக நெற்பயிருக்கு தேவையான தண்ணீரை பயன்படுத்த முடியும். அவ்வாறு குளங்களில் உள்ள தண்ணீரை எடுத்து வயல்களுக்கு பாய்ச்சும் போது அந்த தண்ணீர் மீண்டும் குளங்களுக்கே வந்து சேரும். குளங்கள் மற்றும் அதன் வழித்தடங்களை தூர்வாரினால் பல டிஎம்சி தண்ணீரினை சேமிக்க முடியும் என வலங்கைமான் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>