சீக்கியர்கள்-முஸ்லீம்கள் இடையே வெறுப்பை வளர்க்க உரி தாக்குதல் இந்தியாவால் திட்டமிடப்பட்டது: பாக். ஊடகங்கள்

2016-20-9-16-19-15

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி தாக்குதல் சீக்கியர்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே வெறுப்புணர்வை அதிகரிக்க இந்தியாவால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீநகரை அடுத்த உரி பகுதியில் ராணுவத் தலைமையகத்தில் நுழைந்து 4 பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ஊடகங்கள் காஷ்மீரில் வாழும் சீக்கியர்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே வெறுப்புணர்வை அதிகப்படுத்தி பிரிவினைவாதத்தைத் தூண்டவே உரி பகுதியில் தாக்குதலை இந்தியா திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக சீக்கியர்கள் ஆதரவாகக் குரல் கொடுத்துவருவதால் இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>