சிவப்பாக மாறிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் கடும் பீதி

ஜக்கம்மா செய்தி

திருச்செந்தூர் : சென்னையில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் பரவியதை போல திருச்செந்தூர் கடலிலும் நேற்று திடீரென எண்ணெய் படலம் உருவாகி கடல் சிவப்பு நிறமாக மாறியது. இதனால் பக்தர்கள் குளிக்க தயங்கி, பீதி அடைந்தனர். திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு திருச்செந்தூர் கடலில் திடீரென எண்ணெய் படலம் உருவானது. சென்னை எண்ணூரில் ஆழ்கடலில் கப்பல்கள் மோதியதில் கடலில் உருவான எண்ணெய் படலம் போன்று கடலில் திட்டுகளாக எண்ணெய் மிதந்து வந்தது. இதனால் வழக்கமாக நீல நிறத்தில் காட்சியளிக்கும் கடல் தண்ணீர் சிவப்பு நிறத்தில் மாறியது. இந்த எண்ணெய் படலம் கோயில் பகுதியில் இருந்து 1 கி.மீ. தூரம் வரை பரவியது. வழக்கமாக பக்தர்கள் குளிக்கும் இடத்தில் எண்ணெய் படலம் காணப்பட்டதால் கடலில் நீராட வந்த பக்தர்கள் பீதி அடைந்தனர். இதனால் பக்தர்கள் பலர் கடலில் குளிக்கத் தயங்கினர். எனவே பக்தர்கள் நாழிக்கிணற்றில் மட்டும் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>