சிவகாசி பட்டாசு கடை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க மு.க.ஸ்டாலின்

சிவகாசி பட்டாசு கடை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க மு.க.ஸ்டாலின்

சிவகாசி பட்டாசு கடை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க மு.க.ஸ்டாலின்

சென்னை: சிவகாசி பட்டாசு கடை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு விபத்து குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு கடையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அண்மைக் காலமாக தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய வெடி விபத்துகள் நிகழ்வது அதிகரித்து வருகிறது. செயலிழந்துள்ள தமிழக அரசு பாதுகாப்பு பணிகளில் அலட்சியம் காட்டுவதன் விளைவாக அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது. இனியாவது அலட்சியம் காட்டாமல் துரிதமாக செயல்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதுடன், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், மருத்துவமனையில் உயிருக்குப் போராடுபவர்களுக்குத் தேவையான அவசிய சிகிச்சையையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு நிதி உதவியும் வழங்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): அனுமதி பெற்ற பட்டாசு கடைகள் அனைத்தையும் தீபாவளி பண்டிகை முடியும் வரை தொடர்ந்து சோதனை செய்வதோடு, அதன் அருகில் தீயணைப்பு வண்டிகள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியானவர்கள் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தமிழிசை சவுந்தரராஜன் (பாஜ): பட்டாசு தொழிலில் ஈடுபடுவோர்க்கு உரிய தற்காப்பு பயிற்சி மற்றும் வெடி மருந்துகளின் ஆபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு பயிலரங்கங்கள் கட்டாயம் தேவை. இதற்கான அரசாணை வரவேண்டும்.

அன்புமணி (பாமக): சிவகாசி நகரில் இப்போதும் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பட்டாசு மற்றும் வெடிமருந்து கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது?. இதில் ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கொண்டு நீதிவிசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>