சிவகாசி பட்டாசு கடை விபத்தில் 9 பேர் பலியான வழக்கு : ஏன் C.B.I-க்கு மாற்றக்கூடாது ? – நீதிபதிகள்

2016-25-10-15-06-25

சிவகாசி பட்டாசு கடை விபத்தில் 9 பேர் பலியான வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் அமர்வு மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ஒரே கட்டிடத்தில் பட்டாசுக்கடைக்கும் ஸ்கேன் நிலையத்துக்கும் அனுமதி கொடுத்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிள்ளனர். பட்டாசு கடைக்கு அனுமதி கொடுத்த வருவாய்த்துறை அதிகாரியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு விளக்கம் அளித்த அதிகாரி கரூர், திருச்சியில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி கொடுத்ததில் விதமீறல்கள் நடைபெற்றுள்ளதாக கூறினார். இதனையடுத்து விதிமீறல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அதிகாரி நீதிபதிகளிடம் தெரிவித்தார். பின்னர் பட்டாசுக் கடை விதிமீறல் தொடர்பாக கரூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக கடந்த வியாழனன்று மதியம் சிவகாசியில் பட்டாசு ஆலையில் இருந்து 2 வேன்களில் கொண்டு வரப்பட்ட தீப்பெட்டி மத்தாப்பு ரக பட்டாசுகளை கடையில் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது உராய்வால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கண்ணி மைக்கும் நேரத்துக்குள் கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறத் தொடங்கின. இதில் கடும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட அருகிலிருந்த ஸ்கேன் சென்டரில் இருந்தவர்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>