சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில்2 மாதங்களில் மட்டும் 20 வெடி விபத்துக்கள்: 16க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில்2 மாதங்களில் மட்டும் 20 வெடி விபத்துக்கள்: 16க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில்2 மாதங்களில் மட்டும் 20 வெடி விபத்துக்கள்: 16க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் காரணமாக அதிகரித்து வரும் உயிரிழப்பால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சிவகாசி, சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக பட்டாசு தொழிற்சாலையில் விபத்துக்களும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 20 வெடி விபத்துக்கள் நடைபெற்றிருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் 16க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததே அதிக உயிரிழப்புக்கு காரணம் என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிவகாசு அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தீ, காய சிகிச்சைப்பிரிவில் போதிய மருத்துவ வசதி இல்லாதே உயிரிழப்பை அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். வீடுகளில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>