சிறுவாணி ஆற்றின் குறுக்கே ரூ.900 கோடி ஒதுக்கீடு : நீர்மின் திட்ட மதிப்பீட்டு குழு தொழில்நுட்ப இசைவு

கேரள மாநிலம் அட்டப்பாடியில் சிறுவாணியின் குறுக்கே 450 மீட்டர் நீளம் கொண்ட அணைகட்ட கேரள அரசு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வந்தது. அணை கட்டப்பட்டால் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துவிடும்

கேரள மாநிலம் அட்டப்பாடியில் சிறுவாணியின் குறுக்கே 450 மீட்டர் நீளம் கொண்ட அணைகட்ட கேரள அரசு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வந்தது. அணை கட்டப்பட்டால் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துவிடும்

திருவனந்தபுரம்: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு நீர்மின் திட்டங்களுக்கான மதிப்பீட்டுக்குழு தொழில்நுட்ப இசைவு அளித்துள்ளதால் கோவை, ஈரோடு, மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் அட்டப்பாடியில் சிறுவாணியின் குறுக்கே 450 மீட்டர் நீளம் கொண்ட அணைகட்ட கேரள அரசு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வந்தது. அணை கட்டப்பட்டால் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துவிடும் என்று கூறி கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் போராடினர்.

இதையடுத்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் நீர்மின் திட்டங்களுக்கான மதிப்பிட்டு நிபுணர்குழு அணை கட்டுவதற்கான தொழில்நுட்ப இசைவை கேரள அரசுக்கு திடிரென வழங்கியுள்ளது. இதையடுத்து அணையை கட்டுவதற்கான முதல்கட்ட பணிகளை கேரளா தொடங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கோவை ஈரோடு, மாவட்ட விவசாயிகள் கேரளாவின் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அணைகட்டும் திட்டத்துக்கு கேரள அரசு ரூ.900 கோடி ஓதுக்க முடிவு செய்துள்ளது. கேரளாவில் உற்பத்தியாகும் ஆறுகளில் 20 சதவீத நீர் கடலில் வீணாக கலக்கிறது.

எனவே சிறுவாணியில் அணைகட்ட கேரள அரசுக்கு அவசியம் இல்லை. ஆனால் குடிநீருக்காகவும், நீரமின் உற்பத்திக்காகவும் அணையை கட்ட திட்டமிட்டுள்ளதாக கேரளா கூறியுள்ளது. இருப்பினும் முல்லை பெரியாறு, அணை பிரச்சினையில் பழி தீர்க்கும் விதமாகவே கேரள அரசு இவ்வாறு செயல்பட்டு வருவதாக கருதப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>