சிபிஐ விசாரணை நடத்தி உத்தரவு வரும்வரை உடலை வாங்க மாட்டோம்:ராம்குமாரின் தந்தை

நாளை ஜாமீன் கிடைக்கும் என்ற நிலையில் சதி திட்டம் போட்டு எனது மகனை இன்று போலீஸார் கொன்றுவிட்டனர். எனது மகனின் உடலை சிபிஐ விசாரித்து, உத்தரவு இடாமல் வாங்க மாட்டோம்.

நாளை ஜாமீன் கிடைக்கும் என்ற நிலையில் சதி திட்டம் போட்டு எனது மகனை இன்று போலீஸார் கொன்றுவிட்டனர். எனது மகனின் உடலை சிபிஐ விசாரித்து, உத்தரவு இடாமல் வாங்க மாட்டோம்.

ராம்குமார் உடலை வாங்க மாட்டோசென்னை: சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த ராம்குமாரின் உடலை சிபிஐ விசாரணை நடத்தி உத்தரவு வரும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவரது பரமசிவம் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைதுசெய்து சென்னையில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், புழல் சிறையின் சமையல் அறைக்கு வெளியே உள்ள வெளியில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்துள்ளார். மின் வயரை உடலிலும் செலுத்தியுள்ளார். இதை அறிந்ததும், ராம்குமாருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் என்று சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறிகையில், ‘நானும், எனது மனைவியும் ராம் குமாரை சந்திக்க சென்று இருந்தோம். போலீஸ் அதிகாரி முன்புதான் அவனை சந்தித்து முக்கால் மணி நேரம் பேசினோம். எங்களை பார்த்தவுடன் அழுதான். ஆனால், அவன் அப்போது நல்ல மனநிலையில் இருந்தான். அவனது உடலும் ஆரோக்கியமாகத் தான் இருந்தது.
இந்நிலையில், நாளை ஜாமீன் கிடைக்கும் என்ற நிலையில் சதி திட்டம் போட்டு எனது மகனை இன்று போலீஸார் கொன்றுவிட்டனர். எனது மகனின் உடலை சிபிஐ விசாரித்து, உத்தரவு இடாமல் வாங்க மாட்டோம்.
நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம். நாங்கள் சென்னை செல்லவில்லை. எங்கள் சார்பில் சிலர் சென்னை சென்றுள்ளனர். நாங்கள் பின்னர்தான் சென்னை செல்வது குறித்து முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>