சிதம்பரத்தில் வறட்சியால் உயிர் இழந்த விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை நிகழ்ச்சி

TVS

தமிழகம் கடந்த ஆண்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வறட்சியை சந்தித்தது.இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் உயிர் இழந்தனர். அரசின் சொற்ப உதவி உயிர் இழந்தவர்களின் குடும்பங்களின் கடனை அடைக்கவோ, குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. குழந்தைகளின் கல்வி பாதிக்கபடாமல் பாதுகாக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முயற்சி மேற்கொண்டது. இதற்கு பல்வேறு அமைப்புகள்,நண்பர்கள், குழந்தைகளின் கல்விக்கு உதவ மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனையொட்டி சிதம்பரத்தில் கடலூர்,தஞ்சை,திருவாரூர்,நாகை ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் உயிர் இழந்த விவசாயிகளின் குழந்தைகள் 43 பேருக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சனி மாலை நடைபெற்றது. மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார், நாகை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன்,சுந்தரமூர்த்தி(திருவாரூர்)நடராஜன்(தஞ்சை)இரவிச்சந்திரன்(கடலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட தலைவர் மாதவன் வரவேற்புரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கல்வியாளர் வே.வசந்திதேவி பங்கேற்று விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதனைதொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.சண்முகம், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலார் ஜனார்தனன்,அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வேலூர் கோட்டச் செயலாளர் எஸ்.ஜெயஸ்ரீ , ராம்கோ சிமெண்ட் நிறுவன நிர்வாகி ராம்ராஜ், விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டபொருளாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் விவசாயிகளின் நலன் குறித்தும், உயிர் இழப்பிற்கு பிறகு அவர்களின் குடும்பங்கள் படும் துயரம் குறித்து பேசினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு மூசா,ஜான்சிராணி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்,விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் சங்க மாவட்டதுணைத்தலைவர் கற்பனைச்செல்வம் நன்றி கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>