சிக்கிம் எல்லை பிரச்னை சீன பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை

31-1401510896-ajit-doval-600-jpg

பீஜிங்: ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு சீனாவில் நேற்று தொடங்கியது. சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லானில் சீனா ராணுவம் சாலை அமைத்ததை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இருநாட்டு படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக நிலவும் இந்த பிரச்னை இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், ‘பிரிக்ஸ்’ அமைப்பில் உள்ள நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். நேற்றைய மாநாட்டின் போது, சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியிசாயுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சிக்கிம் எல்லை பிரச்னை குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்பட்டது. இன்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அஜித் தோவல் சந்திக்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>