சஸ்பெண்டான எம்எல்ஏக்கள் நுழைய தடை : கோட்டையில் உச்சகட்ட பாதுகாப்பு

போட்டி சட்டசபை போல எதுவும் நடந்து விடாதபடி தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் தலைமை செயலகம் கொண்டு வரப்பட்டுள்ளது.சட்டசபை நிகழ்வுகளை சேகரிக்க 2 செய்தியாளர் மற்றும் ஒரு ஒளிபரப்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று செய்தி துறை தெரிவித்துள்ளது.

போட்டி சட்டசபை போல எதுவும் நடந்து விடாதபடி தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் தலைமை செயலகம் கொண்டு வரப்பட்டுள்ளது.சட்டசபை நிகழ்வுகளை சேகரிக்க 2 செய்தியாளர் மற்றும் ஒரு ஒளிபரப்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று செய்தி துறை தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழக சட்டசபையில் போலீஸ் துறை மீதான மானியக்கோரிக்கை இன்று வருவதையொட்டி, தலைமை செயலகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, போட்டி சட்டசபை போல எதுவும் நடந்து விடாதபடி தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் தலைமை செயலகம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில், பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை தற்போது நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிக உறுப்பினர்களை கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அவை நடவடிக்கையில் பங்கேற்று நாள்தோறும் மக்கள் நலனை முன்வைத்து மானியக்கோரிக்கையில் பேசி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டுவசதி வாரிய மானியக் கோரிக்கையின் போது அதிமுக உறுப்பினர் குணசேகரன், ‘நமக்கு நாமே’ குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். எனவே, அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள், சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், அவைக் குறிப்பில் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் பேசியதை நீக்க மறுத்து விட்டார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது, அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி சபாநாயகர் தனபால், திமுக எம்எல்ஏக்கள் 79 பேரை, அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றியதுடன், அவர்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு செல்ல தலைமை செயலகம் வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் 4வது நுழைவு வாயிலில் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து 4வது நுழைவு வாயில் அருகில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 19ம் தேதி 2வது நாளாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தலைமை செயலகம் வந்தனர். பின்னர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் எதிரில் சேர் போட்டு அமர்ந்து, போட்டி சட்டமன்ற கூட்டத்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. கடந்த 2 தினங்களில் சட்டசபை வளாகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று தாக்கல் செய்கிறார். எனவே, இந்த துறைகளின் மீதான மானியக்கோரிக்கையின்
போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் மீண்டும் கோட்டைக்குள் வரலாம்.

அப்போது போட்டி சட்டசபை நடத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது போல, வேறு ஏதாவது திட்டங்கள் அவர்கள் வைத்திருக்கலாம் என்கிற கருத்து கோட்டை வட்டாரத்தில் உலா வருகிறது. எனவே, கோட்டைக்குள் விட்டால் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து அது மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதன் மூலம் காவல் துறை உள்ளிட்ட துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மற்றும் அறிவிப்பு முக்கியத்துவம் பெறாமல் போகலாம் என்பதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டை வளாகத்திற்குள் நுழையாமல் இருக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோட்டை நுழைவு வாயிலில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர் தர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று தலைமை செயலகத்துக்கு வருபவர்களை, கோட்டை வாயிலில் இருக்கும் போலீசார் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் போலீசாருக்கு தரப்பட்டுள்ளது. அவர்கள் கோட்டைக்கு வரும் பட்சத்தில் உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்று போலீசாருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரிகையாளர்களுக்கும் அதிரடி கட்டுப்பாடு

இன்று போலீஸ் துறை மீதான மானியக் கோரிக்கை உள்ளிட்ட சட்டசபை நிகழ்வுகளை சேகரிக்க 2 செய்தியாளர் மற்றும் ஒரு ஒளிபரப்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று செய்தி துறை தெரிவித்துள்ளது. அடையாள அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும், மேலும், நான்காம் கேட் அருகே உறுப்பினர்களிடம் பேட்டி எடுக்க அனுமதி கிடையாது என்றும், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் கட்சிகள் நாமக்கல் மாளிகை அருகே மட்டுமே பேட்டி கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நேரடி ஒளிபரப்ப செய்ய வேண்டும் என்றும் செய்தித்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தலைமை செயலகத்தில் செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களுக்கு இது ேபான்று செய்தித்துறை சார்பில் கடுமையான கட்டுப்பாடு விதிப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>