சவுந்தர்யா ரஜினிகாந்தின் உருவ படம் எரிப்பு

2016-20-9-14-18-34nh

திருச்சி: விலங்குகள் நல வாரியத்தின் தூதராக ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விலங்குகள் நலவாரிய நல்லெண்ண தூதர் பதவியை ரஜினி மகள் சவுந்தர்யா உடனடியாக ராஜினாமா செய்ய தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அவருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டங்களையும், உருவபடத்தையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணம் விலங்குகள் நல வாரியம் என வீர விளையாட்டு மீட்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த அமைப்புகள் தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டை கடுமையாக எதிர்க்கும் விலங்குகள் நல வாரியத்துக்கு தூதராக உள்நோக்கத்துடன் செளந்தர்யா நியமிக்கப்பட்டதாக தமிழர் வீர விளையாட்டுப் பேரவையின் குற்றச்சாட்டியுள்ளது. இந்நிலையில் இன்று திருச்சியில் சவுந்தர்யாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>