சற்குணபாண்டியன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

சற்குணபாண்டியன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

சற்குணபாண்டியன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில்அஞ்சலி

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர் அணி, மகளிர் அணி என அனைத்து பொறுப்புக்களிலும் சிறப்பாக பணியாற்றியவர் என சற்குணபாண்டியன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சற்குணபாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பம் மற்றும் மகளிர் அணிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொளவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

spsk_2970906f

தி.மு.க. முன்னாள் அமைச் சரும், துணை பொதுச் செயலாளருமான எஸ்.பி.சற்குண பாண்டி யன் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. இருதய ஆபரேஷன் செய்யப்பட்ட அவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த அவரது உடல்நிலை நேற்று இரவு மோசம் அடைந் தது. இரவில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த சற்குணபாண்டி யன் தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர். கணவர் பெயர் சற்குண பாண்டியன், 1989&ல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார்.1996 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று சமூகநலத்துறை அமைச்சரானார்.

கட்சியில் மகளிர் அணி துணை செயலாளர், மாநில செயலாளர், தலைமை செயற் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகித்தார். மகளிர் ஆணையத்தின் தலை வராகவும், பொறுப்பு வகித்த அவர் தற்போது துணை பொதுச்செயலாளராக இருந் தார். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நன்மதிப்பை பெற்ற சற்குண பாண்டியன் 12 வயது முதலே மேடை பேச்சாளராக உரு வாகினார்.

சற்குணபாண்டிய னின் உடல் ராயபுரம் வழக்கறிஞர் சின்னதம்பி முதல் தெருவில் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சற்குண பாண்டியன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன் னாள் அமைச்சருமான எஸ்.பி. சற்குணபாண்டியன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மறைந்தார். அவரது மறைவினை யட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்பு கள் அனைத்தும் கழகக் கொடி களை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>