சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்தத்தின் அடிப்படையை விட்டுக் கொடுக்கவில்லை – அருண் ஜேட்லி

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்தத்தின் அடிப்படையை விட்டுக் கொடுக்கவில்லை - அருண் ஜேட்லி

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்தத்தின் அடிப்படையை விட்டுக் கொடுக்கவில்லை – அருண் ஜேட்லி

டெல்லி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜி.எஸ்.டி குறித்த மக்களின் கவலை அகன்றுவிட்டது என கூறினார். அ.தி.மு.க நேற்று வெளிநடப்பு செய்ததை மறைமுகமாக குறிப்பிட்ட அவர், அதனால் தான் இந்த மசோதா எதிர்ப்பின்றி நிறைவேறியதாக குறிப்பிட்டார். மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதலுக்கு பிறகு ஜி.எஸ்.டி மசோதா குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்பப்படும் என்றார். மேலும் பேசிய அவர் முன்னதாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு மாநில அரசுகளின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றார். அனைத்து அரசியல் கட்சிக ளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் ஜி.எஸ்.டி மசோதா திருத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

இது குறித்து விளக்கமளித்த அவர் அரசியல் கட்சிகள் கோரிய சில திருத்தங்களை ஜி.எஸ்.டி மசோதாவில் செய்துள்ளதாகவும், அதேசமயம் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்தத்தின் அடிப்படையை விட்டுக் கொடுக்கவில்லை எனறும் கூறினார். சரக்கு மற்றும் சேவை வரியை மாற்றியமைக்க அரசியல் சட்டத்தின் 122-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை நோக்கிய மிகமுக்கியமான நடவடிக்கையே ஜி.எஸ்.டி மசோதா என்றார். பல மாநிலங்கள் இந்த மசோதாவால் வரிவருவாய் அதிகரிக்கும் என நம்புவதாக குறிப்பிட்ட அவர், உற்பத்தி மாநிலங்களின் வரி இழப்பை தடுக்கவும் ஜி.எஸ்.டி உதவும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>