சம்பா சாகுபடிக்கு காவிரி தண்ணீர் பெற்றுத் தராவிட்டால் செப்.10 முதல் தமிழகத்தில் தொடர் போராட்டம்

பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும், பிரதமரை சந்தித்த பிறகும் தண்ணீர் கிடைக்காவிட்டால் மத்திய,  மாநில அரசுகளை கண்டித்து செப்டம்பர் 2வது வாரம் முதல் மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவது

பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும், பிரதமரை சந்தித்த பிறகும் தண்ணீர் கிடைக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து செப்டம்பர் 2வது வாரம் முதல் மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவது

சென்னை: காவிரி பிரச்னையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் திமுக விவசாய அணி, கரும்பு விவசாயிகள் சங்கம், ஏரிபாசன விவசாயிகள் சங்கம், மதிமுக விவசாய அணி, தமாகா விவசாய அணி உள்ளிட்ட 30 விவசாய அமைப்பினர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார்.கூட்டத்தில், ‘காவிரி பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும், பிரதமரை சந்தித்த பிறகும் தண்ணீர் கிடைக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து செப்டம்பர் 2வது வாரம் முதல் மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா, அண்டை மாநிலங்களுடன் நட்புறவு கொள்ளாமல் தொடர்ந்து வீண்பிடிவாதம் செய்து வருகிறார். எது நடந்தாலும், அது தாம் செய்ததாக தான் இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அவரின் வீண் பிடிவாதத்தில் நாட்டின் உயிர்துடிப்பான விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வரை தமிழக விவசாயிகள் எளிதில் சந்திக்க முடிகிறது. ஆனால் சொந்த மாநிலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விவசாயிகளால் சந்திக்க முடிவதில்லை. சம்பா சாகுபடிக்கு உரிய தண்ணீரை பெற்றுத்தரக் கோரி செப்டம்பர் முதல் வாரத்தில் பிரதமரை நேரில் சந்திக்க உள்ளோம். அதன்பிறகும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து செப்டம்பர் 2வது வாரம் முதல் சாலை மறியல், கடையடைப்பு, ரயில் மறியல் என தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>