சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது மேட்டூர் அணை : நீர் திறப்பை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

201607020951565144_mettur-dam-water-level-rises_secvpf

மேட்டூர்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதலில் வினாடிக்கு 5,000 கனஅடியும் பின்னர் படிப்படியாக 15,000 கன அடி வரை நீர்திறப்பு அளவு உயர்த்தப்பட உள்ளது. இதனிடையே திறக்கப்படும் நீரின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 87 அடியாக அதாவது 50 டி.எம்.சி-யாக உள்ளது. சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள குறைந்தபட்சம் 100-லிருந்து 120 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 12,000 முதல் 15,000 கன அடி நீர் தொடர்ச்சியாக திறக்கப்பட்டால் 35 முதல் 40 நாட்களுக்கு மட்டுமே இந்த தண்ணீர் திறப்பு இருக்கும். பின் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் கூறியுள்ளனர். எனவே கர்நாடகத்திடமிருந்து கூடுதல் நீரை பெற வேண்டும். அதே சமயம் வடகிழக்க பருவமழை நடப்பாண்டில் கைகொடுக்க வேண்டும். இந்த இரண்டும் நடைபெற்றால் மட்டுமே சம்பா சாகுபடியை முழுமையாக செய்ய முடியும் என்றும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக இன்று காலை 8 மணியளவில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்காக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். மேட்டூர் அணையின் 8-வது மேல்மட்ட மதகில் இருந்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து வைத்துள்ளார். திறந்துவிடப்பட்ட தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>