சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது:மத்திய அரசு

20-1426860969-oil-minister-dharmendra-pradhan345-6000

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ஒரு மாதத்துக்கு 4 ரூபாய் வீதம் குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதும் நீக்க மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இது குறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இப்போது, 14.2 கிலோ எடையுள்ள பன்னிரண்டு சமையல் காஸ் சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் ஒரு வருடத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. 12-க்கும் மேல் போனால், காஸ் சிலிண்டரை மானியம் இல்லாமல் 564 ரூபாய்க்கு வாங்க வேண்டி வரும். மத்திய அரசின் இந்த அறிவிப்பு சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்வது குறித்து எதிர்க்கட்சிகள் இன்று மாநிலங்களவையில் சரமாரியாகக் கேள்வியெழுப்பினர். இதனால், அமளி நிலவியது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த தர்மேந்திர பிரதான் ‘சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது. யாருக்குத் தேவை தேவையில்லை என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும்’ என்று குறிப்பிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>