சமாஜ்வாதி உட்சி பூசல் விவகாரத்தில் திருப்பம்: அகிலேஷ் யாதவை வீட்டிற்கே சென்று சந்தித்த ஷிவ்பால் சிங் யாதவ்

images

லக்னோ: சமாஜ்வாதி கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் எதிரும், புதிருமாக உள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஷிவ்பால் யாதவ் இடையே நடைபெற்ற சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும்கட்சியான சமாஜ்வாதிக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. இதற்கு தீர்வு காண கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூட்டிய கூட்டத்தில் இந்த மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டது. முதலமைச்சர் அகிலேஷ் மீது அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஷிவ்பால் யாதவ் குற்றம்சாட்டியதை அடுத்து இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் அகிலேஷை ஷிவ்பால் யாதவ் சந்தித்து பேசியிருப்பதன் மூலம் பிரச்சனைக்கு முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனிடையே கட்சியில் பிரச்சனைக்கு காரணமாக கூறப்படும் மாநிலங்களவை எம்.பி-யான ராம்கோபால் யாதவ் அகிலேஷிற்கு முழுஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்முடைய குறிக்கோள் அகிலேஷ் யாதவை மீண்டும் முதல்வராக காண வேண்டும் என்பதே ஆகும். அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லையென்ற ராம் கோபால், அவருக்கு கட்சிக்கு வெளியிலும் ஆதரவு உள்ளதாக தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய முலாயம் சிங், மகன் அகிலேஷை கடுமையாக சாடினார். அதிகார போதையில் அகிலேஷ் நடப்பதாகவும், தமது கட்டளைக்குட்பட்டே யாரும் செயல்பட வேண்டும் என்றார். மேலும் கட்சிக்காக உழைத்த ஷவ்பால், அமர்சிங் ஆகியோரை விட்டு கொடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறி அகிலேஷ் தரப்பினருக்கு அதிர்ச்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>