சபாநாயகர் நோட்டீசு: கூடுதல் அவகாசம் கேட்க தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு.

2017-04-09-16-48-06

சட்டபேரவையில் உரிமைக்குழு நோட்டீஸ்க்கு பதில் அளிப்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் முகஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

21 பேருக்கு சபாநாயகர் நோட்டீசு: கூடுதல் அவகாசம் கேட்க தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு
சென்னை:

தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை நடந்து வருவதாக குற்றச் சாட்டுகள் கூறப்படுகின்றன. அதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்ட சபைக்குள் குட்கா பொட்டலங்களை எடுத்து வந்து காண்பித்தனர்.

சபாநாயகர் தனபால் அதை கண்டித்தார். பிறகு அது தொடர்பாக எந்த சர்ச்சையும் எழவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சபாநாயகர் தனபால் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினார். “சட்டசபையில் குட்கா காட்டியதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று அந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ளது.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் 5-ந்தேதிக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தனபால் அறிவுறுத்தி இருந்தார். சபாநாயகர் விதித்த அந்த “கெடு” நாளை (செவ்வாய்க்கிழமை) முடிகிறது.

ஆனால் 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் இதுவரை எந்த பதிலும் விளக்கமும் அளிக்கவில்லை. அவர்கள் அளிக்கும் பதிலைப் பொருத்து சபாநாயகர் முடிவு எடுத்து அறிவிப்பார் என்பதால் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆளும் அ.தி. மு.க. சட்டசபையில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்த, இந்த விவகாரத்தை துடுப்புச் சீட்டாக பயன்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படும் பட்சத்தில் அரசியல் களத்தில் மாற்றங்கள் வரும் என்றும் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியானது.

இதன் காரணமாக 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் நோட்டீசுக்கு அளிக்கும் பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் எத்தகைய முடிவை எடுப்பது என்பது பற்றி ஆலோசிக்க இன்று தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் 21 எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். சபாநாயகர் நோட்டீசுக்கு எப்படி பதில் அளிப்பது? அல்லது பதில் அளிப்பதற்கு கால அவகாசம் பெறுவது பற்றி விவாதிக்கப்பட்டது.

சபாநாயகர் நோட்டீசுக்கு பதில் அளிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் பெற எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்புள்ளது. சட்டத்திலும் அதற்கு வழிவகை உள்ளது. எனவே அந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி கூடுதல் கால அவகாசம் கேட்கலாமா என்று கருத்த தெரிவித்தனர்.

இதற்கிடையே சில எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீசை ரத்து செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்வது பற்றியும் பேசினார்கள்.

பின்னர் கெடு நாளையுடன் முடிவதால் உரிமைக்குழு தலைவரான துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கடிதம் கொடுத்து விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் கேட்க முடிவு செய்யப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>