சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைவதே தங்களின் அடுத்த இலக்கு: திருப்தி தேசாய்

தர்ஹாவிற்குள் பெண்கள் நுழைய கடந்த 2012-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிராக பூமாதா பெண்கள் அமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதே அமைப்புதான் சனீஸ்வரன் கோவில், மாகாலஷ்மி கோவில், திரும்பகேஸ்வரர் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி போராடி வருகிறது

தர்ஹாவிற்குள் பெண்கள் நுழைய கடந்த 2012-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிராக பூமாதா பெண்கள் அமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதே அமைப்புதான் சனீஸ்வரன் கோவில், மாகாலஷ்மி கோவில், திரும்பகேஸ்வரர் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி போராடி வருகிறது

மும்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைவதே தங்களின் அடுத்த இலக்கு என்று சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவிற்கு கல்லறை வரை சென்று வழிபாடு நடத்த பெண்களுக்கு தர்ஹா அறக்கட்டளை தடைவிதித்திருந்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தர்ஹாவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தீர்ப்பை 6 வார காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு அறக்கட்டனை விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றது. இதையடுத்து பூமாதா பெண்கள் அமைப்பின் தலைவரான திருப்தி தேசாய் தர்ஹாவிற்குள் சென்று வழிபாடு நடத்தினார். இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று கூறிய அவர் அடுத்ததாக சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டு போராடப்போவதாக தெரிவித்தார்.
உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று ஹாஜி அலி தர்ஹா அறக்கட்டளையை கேட்டுக்கொள்வதாக திருப்தி தேசாய் வேண்டுகொள்விடுத்துள்ளார். இந்த தர்ஹாவிற்குள் பெண்கள் நுழைய கடந்த 2012-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிராக பூமாதா பெண்கள் அமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதே அமைப்புதான் சனீஸ்வரன் கோவில், மாகாலஷ்மி கோவில், திரும்பகேஸ்வரர் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி போராடி வருகிறது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>