சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதை தடுக்க தமிழக அரசு உதவ இந்து அமைப்பு கோரிக்கை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதை தடுக்க தமிழக அரசு உதவ இந்து அமைப்பு கோரிக்கை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதை தடுக்க தமிழக அரசு உதவ இந்து அமைப்பு கோரிக்கை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசின் உதவியை நாடப்போவதாக கேரளாவைச் சேர்ந்த இந்து அமைப்பு கூறியுள்ளது. சபரிமலையில் பல நூற்றூண்டுகளாக பின்பற்றி வரும் நடைமுறையை மாற்றி அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நவம்பரில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாலின பாகுபாடு கூடாது என கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தரன் கூறியுள்ளார்.

இதனால் பெண்கள் நுழைவதை கேரள அரசு ஆதரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து பெண்கள் நுழைவதை தடுக்க தமிழக அரசின் உதவியை கோரப் போவதாக இந்து ஐயப்ப தர்ம சேனா சங்கத்தின் நிர்வாகியும், ஐயப்பன் கோயில் தலைமை அர்ச்சகரின் பேரனுமான ராகுல் ஈஸ்வர் கூறியுள்ளார்.
சபரிமலையில் பெண்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என கேரள அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில் எடுக்கப்பட்ட இந்த நிலைப்பாட்டை தற்போது இடதுசாரி முன்னணி மாற்றிக்கொண்டுள்ளதையடுத்து தமிழகத்தின் உதவி கோரப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலை ஆண்டு முழுவதும் திறந்து வைத்திருக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த வாரம் தெரிவித்த யோசனையை தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் நிராகரித்துவிட்டார். இந்த நிலையில் சபரிமலை கோயிலின் தலைமை அர்ச்சகரின் பேரன் தமிழக முதலமைச்சரை சந்திக்கப் போவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>