சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் பேட்டி

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

ஊடகங்கள் மட்டுமல்ல; அரசியல்வாதிகள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன !காவல்துறை மானியக் கோரிக்கையில் நாங்கள் பங்கேற்கக் கூடாதென்பதற்காகவே சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் !சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்மு.க.ஸ்டாலின் பேட்டி !

“காவல்துறை மானியக் கோரிக்கையில் நாங்கள் பங்கேற்கக் கூடாதென்ப தற்காகவே சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

செய்தியாளர்:- சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டும் சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாத நிலையை எப்படி பார்க்கின்றீர்கள் ?

மு.க.ஸ்டாலின்:- இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். அதனால்தான் நீதி மன்றத்தை நாங்கள் அணுகி இருக்கிறோம். இன்று நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறது என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

செய்தியாளர்:- முதல்வர் பங்கேற்கும் மானியக் கோரிக்கையில் நீங்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக எடுத்துக் கொள்ள லாமா ?

மு.க.ஸ்டாலின்:- நிச்சயமாக. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைகள் !

செய்தியாளர்:- ஊடகங்கள் மீது அடுத் தடுத்து அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படுகிறதே ?

மு.க.ஸ்டாலின்:- ஊடகங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகள் போடப்படுகிறது. தமிழகத்தில் பலவித கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. காவல்துறை மானியம் நடை பெறும் இன்றைக்குக் கூட கோவில்களில், தனியார் நிறுவனங்களில் கொள்ளைகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஊடகத்துறைக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம் !

செய்தியாளர்:- சட்டசபை நடவடிக் கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடகங் களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது குறித்து போராடுவீர்களா ?

மு.க.ஸ்டாலின்:- அதற்காக ஊடகத் துறையினர்தான் போராட வேண்டும். எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சட்ட மன்றத்தில் உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>