சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் வரி வருவாய் ரூ.90,691.87 கோடியாக உயரும் என்றும், தமிழக அரசின் செலவினம் ரூ.164,029.56 கோடியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.351 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.3,679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ422 கோடி செலவில் 2,673 வீடுகள் காவலர்களுக்கு கட்டித் தரப்படும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

சென்னை: சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2016-17ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அவர் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.90,691.87 கோடியாக உயரும் என்றும், தமிழக அரசின் செலவினம் ரூ.164,029.56 கோடியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.351 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.3,679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ422 கோடி செலவில் 2,673 வீடுகள் காவலர்களுக்கு கட்டித் தரப்படும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஓராண்டில் 5.35 லட்சம் லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கு மின்சார மானியத்திற்காக ரூ.9,007 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட ரூ.420 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ரூ.182 கோடியும், தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.32.94 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் ரூ.2,52,431 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.7,155 கோடியும், மீனவர்களின் நிவாரணத்திற்காக ரூ.200 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்படி தடைக்கால நிவாரணம் மாதத்திற்கு குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை 2.96 சதவீதமாகும் என தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் நடப்பாண்டு இறுதியில் முதலாவது சுரங்க வழியில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>