சட்டப்பேரவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவி வருவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?

சட்டப்பேரவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவி வருவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?

சட்டப்பேரவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவி வருவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார். பழனிச்சாமி அணியினருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை நிரூபிக்க ரகசிய ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று திமுக, ஓ.பி.எஸ் அணி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டப்பேரவையின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன.

சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்எல்ஏக்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டம் தொடங்கியதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தலைமையிலான அமைச்சரவையின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் கோரிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்பை வேறொரு நாளில் நடத்த ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் சிறை கைதிகளா? என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மக்கள் கருத்தை கேட்டு மீண்டும் சட்டசபையை கூட்டி வாக்கெடுப்பு நடத்த ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கூவத்தூர் குறித்து பேச பேரவைக்குள் அனுமதி இல்லை என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>